தாழ்வாரம் இலக்கிய விருதுகள் - 2018 1. சிறந்த கவிதைக்கான " மலர்-நிர்மா" விருது. வழங்குபவர் : திரு.வட்டூர் ரமேஷ். 2. சிறந்த சிறுகதைக்கான "பார்வதி சுந்தரேசன் நினைவு விருது " வழங்குபவர் : கவிஞர்.செருகுடி.செந்தில் . 3. சிறந்த நாவநாவலுக்கான " மாரிமுத்து நினைவு விருது" வழங்குபவர் : கவிஞர்.வசந்தன். 4. சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான " ஓவியர்.ஆழி.ராமசாமி நினைவு விருது " வழங்குபவர் : கவிஞர்.சத்யன். விழா ,24 பிப்ரவரி 2019, ராயாஸ் ஹோட்டல் , குடந்தையில்.
Posts
Showing posts from January, 2019
- Get link
- X
- Other Apps
தாழ்வாரம் நவீன இலக்கியக் களம் கும்பகோணம் களம் - 12 ♥ தாழ்வாரம் ஓராண்டு நிறைவு நிகழ்வான பன்னிரண்டாவது நிகழ்வு 27/1/2019 அன்று நடைபெற்றது சற்று தாமதமாக தொடங்கிய நிகழ்வு தொடக்கத்திலேயே களை கட்ட ஆரம்பித்தது. கவிஞர் செருகுடி செந்தில் படைப்பாளர்களையும் விமர்சகர்களையும் வரவேற்றுப் பேசி களம் 12ஐ முடுக்கிவிட்டார். அவர் மேலும் பேசுகையில், தொடங்கியதுமுதல் இந்த பன்னிரண்டு மாதங்களில் தாழ்வாரத்தின் பயண அனுபவங்களையும் அதில் வைக்கப்பட்ட நூல்கள் குறித்தும் அவற்றின் படைப்பாளர்கள் குறித்தும் தாழ்வாரத்தில் அறிமுகம் வைக்கப்பட்ட நூல்கள் விருதுகள் வென்றிருப்பதையும் பெருமைபட கூறி படைப்பாளர்களை வரவேற்று அமர்ந்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வை கோ. பாரதிமோகன் தொகுத்து வழங்க... முதலாவது நூலாய் எழுத்தாளர் பா. சரவணகுமரனின் 'கள்ளிவட்டம்' சிறுகதை எடுத்துக்கொள்ளப்பட்டது. எம். எஸ். பாலு அவர்கள் நூல் குறித்து பேசினார். அவர் பேசுகையில் தனது பால்யத்தை நினைவு கூர்ந்து தனது வாழ்வானுபவத்தை கதைகளோடு முன்வைத்து பேசினார். இத்தகைய பண்பே சரவணகுமரனின் படைப்பு வெற்றிபெற்றதற்கான அடையாளமாய் தாழ்வாரக் கூ...
- Get link
- X
- Other Apps
தாழ்வாரத்திற்கு கதவுகள் இல்லை... ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலம் தொட்டே குடந்தையில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் இயங்கி வருகின்றன.திருக்குறள் பேரவை முதல் பல்வேறு இலக்கிய வடிவங்களை விவாதிக்கக்கூடிய எண்ணற்ற இலக்கியக் கூட்டங்களை எண்ணிக்கையில் அடர்ந்தும் குறைந்தம் பலர் நடத்திவந்திருக்கிறார்கள்.ஏனெனில் குடந்தை மண் என்பது கலைகள் இலக்கியம் ஆன்மீகம் என்று முத்துறையிலும் தன் தடத்தை பதித்திருப்பதுதான். அத்தகைய குடந்தை மண்ணில் இலக்கிய உலகில் பெரும் வீச்சோடும் கருத்தியல்புகளை முன் வைக்கிற,நவீன இலக்கியங்கள் குறித்து விவாதிக்கிற ,நூல்ளை அறிமுகப்படுத்துகிற ஒரு இலக்கிய அமைப்பு இல்லையே என்ற கேள்வியின் முடிவில் தோன்றி துவங்கியது தான் 'தாழ்வாரம் - நவீன இலக்கியக் களம்.இதன் வேர்களாக மூன்று பேரும் அதனை நீரூற்றி வளர்க்கிற மனிதங்களாக இலக்கிய ஆர்வலர்களும் படைப்பார்வலர்களும் இருந்து வருவது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. இந்த ஆண்டின் பிப்பிரவரி மாத்த்தின் பிந்தைய ஞாயிறு ஒன்றில் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் ,பாடலாசிரியர் ,இயக்குநர் ஏகாதசி கவிஞர்கள் ஸ்டாலின் சரவணன் ,கு.இலக்கியன்,கோ.பா...
- Get link
- X
- Other Apps
அன்புக்குரிய தோழமைகளுக்கு வணக்கம். தாழ்வாரம், நவீன இலக்கியக் களம் கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் செம்மையாக நடந்து வருகிறது என்பதை பரவலாக இலக்கிய நண்பர்கள் அறிந்தது தான். தாழ்வாரத்தின் பெரும் முன்னெடுப்பாக "தாழ்வாரம் விருது 2018" இந்த ஆண்டு முதல் வழங்க திட்டமிட்டுள்ளோம்.அதற்கு தகுதியான படைப்புகள் நிறைய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விருது வழங்கும் விழாவானது பிப்ரவரி 24 தேதியில் கும்பகோணம் ஹோட்டல் ராயாஸ் ல் நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
தாழ்வாரம்
- Get link
- X
- Other Apps
கும்பகோணத்தில் நவீன இலக்கியக்களமாகத் தாழ்வாரம் திகழ்கிறது. ஓராண்டாக நிகழ்வுகளை முடித்துத் தற்போது ஓராண்டு நிறைவு விழாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நவீன இலக்கிய ஆளமைகளுடனான உரையாடல், படைப்புகள் குறி்த்த உரையாடல், புத்தக வெளியீடுகள் ஆகியவை இக்களத்தில் நிகழும். தொடர்புக்கு பாரதிமோகன் - 8838177139 கு.இலக்கியன் - 9865009984 செருக்குடி செந்தில் - 9629399477