தாழ்வாரத்திற்கு கதவுகள் இல்லை...


ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலம் தொட்டே குடந்தையில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் இயங்கி வருகின்றன.திருக்குறள் பேரவை முதல் பல்வேறு இலக்கிய வடிவங்களை விவாதிக்கக்கூடிய எண்ணற்ற இலக்கியக் கூட்டங்களை எண்ணிக்கையில் அடர்ந்தும் குறைந்தம் பலர் நடத்திவந்திருக்கிறார்கள்.ஏனெனில் குடந்தை மண் என்பது கலைகள் இலக்கியம் ஆன்மீகம் என்று முத்துறையிலும் தன் தடத்தை பதித்திருப்பதுதான்.


அத்தகைய குடந்தை மண்ணில் இலக்கிய உலகில் பெரும் வீச்சோடும் கருத்தியல்புகளை முன் வைக்கிற,நவீன இலக்கியங்கள் குறித்து விவாதிக்கிற ,நூல்ளை அறிமுகப்படுத்துகிற ஒரு இலக்கிய அமைப்பு இல்லையே என்ற கேள்வியின் முடிவில் தோன்றி துவங்கியது தான் 'தாழ்வாரம் - நவீன இலக்கியக் களம்.இதன் வேர்களாக மூன்று பேரும் அதனை நீரூற்றி வளர்க்கிற மனிதங்களாக இலக்கிய ஆர்வலர்களும் படைப்பார்வலர்களும் இருந்து வருவது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.


இந்த ஆண்டின் பிப்பிரவரி மாத்த்தின் பிந்தைய ஞாயிறு ஒன்றில் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் ,பாடலாசிரியர் ,இயக்குநர் ஏகாதசி கவிஞர்கள் ஸ்டாலின் சரவணன் ,கு.இலக்கியன்,கோ.பாரதிமோகன்,செருகுடி.செந்தில்,திரைப்பட வசன எழுத்தாளர் பாக்கியம் சங்கர்,இளங்கவி அருள்,முருக தீட்சண்யா,மீனா சுந்தர்,கே.பாக்யா,யாழி ,நிலாதரன்,வலங்கைமான் நூர்தீன், சத்யன் போன்ற திரளான படைப்பாளர்களின் பங்கேற்போடு துவங்ப்பட்டது தாழ்வாரம்.


அன்று முதல் இன்று வரை சமகால எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகப்படுத்தி விவாதிப்பதும்,கலந்துரையாடுவதும் அடுத்த நிலைக்கு படைப்புகளை முன்னிருத்தி ஊக்கப்படுத்துவது என்றும் செம்மையாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது தாழ்வாரம்.


சிறந்த இலக்கிய விமர்சகராக அறியப்படுகிற பொதியவெற்பன் சமகாலத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை கவிஞர்.யவனிகா ஶ்ரீராம் , வெய்யில் எழுத்தாளர்கள் கணேச குமாரன், விஷ்ணு புரம் சரவணன்,கவிஞர்.சக்திஜோதி ,ஜமாலன் ,அமானுஷ்யன் ,திண்டுக்கல் தமிழ்பபித்தன்,முத்தமிழ்விரும்பி,ஏர்.மகாராசன்,ஆண்டன் பெனி என்று தாழ்வாரத்தில் விவாதிக்கப்படும் நூல்களின் வரிசை நீண்டுகொண்டே இருக்கிறது.

2019ம் ஆண்டு பிப்ரவரியில் இரண்டாம் ஆண்டில் தன் தடத்தை பதிக்கவிருக்கிற தாழ்வாரம் மற்றுமொரு புதிய முயற்சியை கைக்கொண்டிருக்கிறது.அது தாழ்வாரத்தின் இலக்கிய விருதுகள் வழங்க திட்டமிட்டிருப்பது.


எப்போதும் படைப்பாளர்களையும்,படைப்பார்வளர்களையும் ஊக்கப்படுத்தும் தாழ்வாரம் விருதின் மூலமும் கொண்டாடவிருக்கிறது.அந்தந்த ஆண்டிற்கான சிறந்த கவிதை,சிறுகதை,நாவல் ,குழந்தை இலக்கியம் ஆகிய நூல்களுக்கான விருது அறிவித்திருக்கிறது தாழ்வாரம்.மேலும் இவ்விருதின் மூலம்  நட்சத்திர எழுத்தாளர்களைக் கடந்து அறியப்படாத பல நல்ல நூல்களை அடையாளம் காண்பதும் அதன் படைப்பாளர்களை அடையாளப்படுத்துவதும் இதன் நோக்கம்.


இவற்றைக் கடந்து இன்றைக்கு தொடர்ந்து எழுதி வருகிற எல்லாப் படைப்பாளர்களும் சிற்றிதழ்களின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் தான்.தம் எழுத்துக்களை சிற்றிதழ்களின் வழியாக அச்சில் பார்த்து தான் எழுத்துப்பயணத்தை தொதொடங்கயிருக்கக் கூடும்.ஆகவே அத்தகைய சிற்றிதழ்களின் வளர்ச்சி என்பது இன்று பின்னடைவை சந்தித்திருக்கிறது.அந்த சிற்றிதழ்களை மீண்டும் உயிர்ப்பிபதும் அவற்றை அடையாளப்படுத்துவதும் சந்தா சேர்த்து பிரசுரம் செய்ய வழிவகை செய்துவருகிறது தாழ்வாரம்.


மேன்மை பொருந்திய இலக்கிய ஆர்வலர்களும் ஆளுமைகளும் தொடர்ந்து தருகிற நம்பிக்கையாளும் ஊக்கத்தாளும் தாழ்வாரத்தில் பல புதிய முயற்சிகளும் முன்னெடுப்புகளும் பிறக்கிறது.அதனை தீர்க்கமாக ஒரு விளக்கின் தீபத்தை அனையாமல் காப்பாற்றப் போராடுகிற கரங்களாகி காப்பீர்கள் என்ற நம்பிக்கையோடும் உத்வேகத்தோடும் தாழ்வாரம் செழித்தோங்கும்.அதில் நீங்கள் மனம் திறந்து ஈரம் சில்லிட இளைப்பாறலாம்.இலக்கியம் சுகிக்கலாம்.ஏனெனில் தாழ்வாரத்திற்கு கதவுகள் இல்லை.



கு.இலக்கியன்.9865009984.

Comments

Popular posts from this blog

தாழ்வாரம்